Thursday, September 3, 2015

PAnjangam

[9/3, 7:48 PM] Ganesh Krisna: Swamy saranam Good morning
Panjangam B,Sivath majan gurukkal sri SASTHA alayam kadanthethi
Ph~ 9786793576
Aavani ~ 18  / 4.9.2015. Friday
YEAR. ~ Manmatha varudam {Man matha nama samvathsaram}
AYANAM ~ Dhatchinayanam
MONTH  ~ Aavani
{Shimma masam }
PAKSHAM ~ krishnapaksham
THITHI ~ upto 11.36 am shasti and then sabthami
DAY ~ Friday {Birugu vasaram}
NATCHTHRA..  Upto 7.43 am Bharani and Then Krutthigai
YOGAM ~ Sittha yoham
KARANAM ~ Subakaranam
RAGU KALAM ~  10.30 to 12. 00 pm
YEMAGANDAM ~ 3.00 to 4.30 pm
KULIGAI ~ 7.30 to 9.00 am
GOOD TIME  ~ 6.30 to 7.30 am and 5 to 6pm
SUN RISE  ~ 5.58 AM
SUN SET  ~ 6 .17 pm
Chandhirashtamam ~ upto 1.28 pm kanni and then Thulam
SOOLAM ~ West
Prayatchittham ~Jaggiri
Today~ Keez nokku naal
Today ~ Krutthigai
சுவாமி சரணம் பஞ்சாங்கம்
,B,சிவாத்மஜன் குருக்கள். ஸ்ரீ சாஸ்தா ஆலயம் காடந்தேத்தி
PH ~ 9786793576
ஆவணி 18 /4.9.2015
வெள்ளி கிழமை
வருடம் ~மன்மத வருடம்   { மன்ம நாம சம்வத்ஸரம்}
அயனம் ~  தக்ஷிணாயணம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ ஆவணி {சிம்ம  மாஸம்}
பக்ஷம் ~ கிரிஷ்ணபக்ஷம்
திதி ~ 11.36 am சஷ்டி பின் சப்தமி
நாள் ~ வெள்ளி {ப்ருஹுவாஸரம்}
நட்சத்திரம் ~ 7.43 am வரை பரணி  பின் கிருத்திகை
யோகம் ~  சித்த யோகம்
கரணம் ~ சுபகரணம்      
நல்ல நேரம் ~ காலை 6.30~7.30& 5.5~ 5.30pm
ராகு காலம்~  10.30 ~12
எமகண்டம்~ 3~4.30
மாலை 
குளிகை ~  காலை  7.30~9
சூரிய உதயம் ~ காலை  5.58 am 
சூரியஅஸ்தமனம் ~   மாலை. 6.17 pm
சந்திராஷ்டமம் ~ 1.28 pm வரை கன்னி பின் துலாம்
சூலம் ~ மேற்கு   
பரிகாரம் ~ வெல்லம்
இன்று ~ கீழ் நோக்கு நாள்
இன்று ~ கிருத்திகை
[9/3, 8:52 PM] sivathmajan B: கோகுலாஷ்டமி-05-09-2015இந்த மாதத்தில் கோகுலாஷ்டமி வருகிறது.சாமான்யமாகசிவராத்திரியானது சிவனுக்கு விசேஷம்.நவராத்திரி அம்பாளுக்குவிசேஷம்.ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது.கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடையபெயரில் இருக்கிறது.ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடையபெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தைவைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியைவைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே விஷ்னு ஸ்வரூபமாக அவதரித்தவர்.மற்றவர்களெல்லாம் அம்சா அவதாரம் என்று சொல்லுவார்கள்.ராமபிரானையேஎடுத்துக்கொண்டால் கூட தியாகம் சுமந்து,தியாகத்தில் பாரிபாஸ்தை ராமருக்கும் மற்றொரு பாரிபாஸ்தைஇலட்சுமண பரத சத்ருக்கனன் என மூவருமாக பகிர்ந்துகொண்டதைத்தான் வரலற்றில் நாம் காண்கிறோம்.ஆகவே, முழுமையான அவதாரம் கொண்டவர் கிருஷ்ணபகவான்தான்.தன்னைத்தானே பகவான் பகவான் என்று பல இடங்களில் சொல்லிக்கொள்கிறார்.பகவானாகவே பிறந்திருந்தாலும் நான் மனிதர்களுக்கெல்லாம் நன்மைசெய்வதற்கென்றே பிறந்திருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும்தன்னை மனிதனாகவே சொல்லிக்கொள்கிறார்.முழுமையான அவதாரமாககிருஷ்ண பகவானை கருதுவதால் அவர்பிறந்தஇடத்தையும், திதியையும் வைத்துமரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று சொல்லியிருக்கிறார்கள்.அதேபோல், பகவத் கீதையை பார்த்தாலும்அர்ஜுனஉவாச, சஞ்சீவஉவாச, திருதராஷ்டிர உவாச என்றுதான்இருக்கும்.இப்படி பல பேருடைய பெயர்கள் வந்தாலும் கூட,கிருஷ்ண பகவானின் உபதேசம் என்றாலும் கிருஷ்ண உவாச என்றுஇருக்காது, பகவான் உவாச என்றுதான் இருக்கும்.அங்கேபெருமைக்காக மரியாதையுடன் அழைப்பதற்காக பகவான் உவாசஎன்று.இங்கே பெரிய இடத்துப் பிள்ளையாக, பகவானுடையஸ்வரூபமாக இருப்பதனால் அவர் பெயரை சொல்லக் கூடாதென்பதற்காககோகுலாஷ்டமி என்று வைத்தார்கள்.சாட்சாத் பகவான் ஸ்வரூபமாக இருப்பதனால் எந்தப்பெயரை வைத்து அழைப்பதென்றில்லாமல் கோகுலாஷ்டமிஎன்றழைத்தார்கள்.இப்படிப்பட்ட கிருஷ்ணாவதாரத்தில்பரிபூரணாநந்த ஸ்வரூபம் கோகுலாஷ்டமி அன்று வருகிறது.ஸ்ரீ ஜெயந்தி என்றும் அதை சொல்லுவார்கள்.லட்சுமியை பிரதானமாகவைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போதுஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.மற்ற அனைவரும்பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலேராஜ்யபரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில்ஒன்றான சோமநாத ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்றஇடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில்இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறுசொல்லுகிறது.குழந்தை முதல் அவர் பலவிதமான லீலைகளையெல்லாம்செய்தவர்.தாய்க்கு உலகம் முழுவதையம் தன்வாய்க்குள்ளேயே காட்டியவர்.பிரம்ம தேவருக்கு பசுக்களைஅழைத்துச் செல்லும்போது தானே பசுவாகவும்கன்றாகவும் இருந்து காட்டியவர்.பல இடங்களில் விஸ்வரூபத்தைவெளிக்காட்டியிருக்கிறார்.பாண்டவர்களின் தூதுவராக போகும்போதுகூட ஒரு சமயம் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டபோது, அந்தநாற்காலியோடு சேர்ந்து தன் விஸ்வரூபத்தைக் காட்டியவர்.இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் அர்ஜுனனுக்கு மட்டும் தெரிந்த விஸ்வரூப ஸ்வரூபம்பகவத்கீதையில் காட்டிய விஸ்வரூப ஸ்வரூபமாகும்.இப்படி விஸ்வரூப வடிவமாக உலக வடிவமாகஎல்லா வடிவமாகவும் இருந்து அருள்பாலிப்பவர்கண்ணபிரான்.இவர் இரவில் பிறந்தார். ஆகவேதான் அறியாமையை அகற்றும்ஜோதியாக விளங்குகிறார்.அஷ்டமி நவமி காலங்களில் மங்களகரமான காரியங்களைசெய்யக்கூடாதென்பார்கள்.ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான்கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம்.மற்றவர்களின்காரியங்களை விட்டுவிடுகிறோம்.அப்படி இருக்கும்போது உலகிலுள்ளலௌகீக காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள்.அப்படி இருக்கும்போது உலகிலுள்ளலௌகீக காரியங்களை செய்யாமல் பகவான் காரியங்களை செய்யவேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம்.மங்களகரமானகாரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை,கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இப்படி கண்ணபிரானின் பெருமையானது வர்ணிக்க முடியாததாகும்.அவரின் விஸ்வரூப தரிசனத்தை எப்படி வர்ணிக்க முடியாதோஅதுபோல்அவருடைய பெருமைகளையும் வர்ணிக்கஇயலாது.அப்படிப்பட்ட கண்ணபிரானின் கோகுலாஷ்டமி தினத்தில்அவரைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் படித்து,பூஜைகள் செய்து, அவர் அருள் பெற்று, அறியாமையிலிருந்துஅகன்று, எல்லா நலன்களையும பெற்று, பரிபூரண ஆனந்தத்தையும், பகவான்அனுகிரஹத்தையும்பெற வேண்டும் என வாழ்த்திஆசீர்வதிக்கின்றோம்ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம

No comments:

Post a Comment